ஏப்ரல் முட்டாள்கள் தினமானது, மக்கள் தங்களின் ஈகோவைக் குறைத்து, நன்றாகச் சிரிக்கக்கூடிய ஒரு இலகுவான மற்றும் வேடிக்கையான சந்தர்ப்பமாகும். போலிச் செய்திகள் முதல் விரிவான குறும்புகள் வரை, இந்த நடைமுறை நகைச்சுவை மற்றும் முட்டாள்தனமான நாளைக் கொண்டாட எண்ணற்ற வழிகள் உள்ளன. எனவே, ஏப்ரல் முட்டாள்கள் தின நகைச்சுவைகளின் உலகத்தை நாம் ஆராயும்போது, ஏமாற்றப்படுவதற்கும், ஏமாறுவதற்கும், மகிழ்வதற்கும் தயாராகுங்கள்!
click here to get whatsapp status for april fool tamil jokes
April Fool’s Day is a light-hearted and fun-filled occasion where people can let their ego down and have a good laugh. From fake news stories to elaborate pranks, there are countless ways to celebrate this day of practical joking and tomfoolery. So, get ready to be tricked, fooled, and amused, as we explore the world of April Fool’s Day jokes!

April Fool Tamil Jokes
ஒருவன் எப்போது முழு மனிதன் ஆகிறான் ? கடைசி சென்டிமீட்டர் வரை வளர்ந்து முடிந்ததும்
கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன் ? ஏன்னா , அதுக்கு நீச்சல் தெரியாது
பாத்திரக்கடையில் உனக்கு எப்படி வேலை கிடைத்தது ? நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடப்பதாய் சொன்னேன் .. !
வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க ? இனிமேயாவது ஜாக்கிரதையா நடந்து போங்க
காபி டம்பளரை வாய்கிட்டே வெச்சுக்கிட்டு அவர் என்ன பேசிக்கிட்டிருக்கார் ? ஆவியோட பேசறாராம் !
எங்க மதுரைக்கு ” துரு ” பஸ் இருக்கா ? இல்லீங்க , எல்லாமே பெயினர்ட் அடிச்ச பஸ்தான் .. !
என்ன உங்க பையனைப் போய் பிரிட்ஜ் உள்ளே உட்கார வெச்சிருக்கீங்க அப்பதானே அவன் கெட்டுப் போகாம இருப்பான் .
ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா ? தெரியாதே ! புரியாம இருக்கியே மக்கு .. ! ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான் !
நீயும் இன்னும் ரெண்டு பேருமாகச் சேர்ந்து ஒரு குண்டூசி பாக்டரி துவங்கறதா இருந்துதே என்ன ஆச்சு ? அவங்க ‘ பின்’வங்கிட்டங்க .
தெருவுல போறவங்க எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டுப் போறாங்களே , ஏன்? அந்த ஆள் ‘ வாட்ச்மேனாம் !
ஒரு குடும்பத்துல அக்கா , தங்கச்சி , அம்மா இவங்க மூனுபேரும் ஒரு பல்பு – ஐ பார்த்து அழுதுட்டே இருந்தாங்கலாம் ஏன் ? ஏன்னா அது சீரியல் பல்பாம் .
கடல் தண்ணி ஏன் உப்பு கரிக்குது தெரியுமா ? தித்திப்பா இருந்தா ஈ மொய்க்கும்ல அதான் உப்பு கரிக்குது .
தோசைய நின்னுக்கிட்டே ஊத்தணும் ….. ஆனா கால் வலிக்கும் … இட்லிய ஊத்திட்டு உட்கார்ந்துக்கலாம் …. ஆனா நிறைய பாத்திரம் கழவணும் … துன்பம் எதில்தான் இல்ல . ?
AB க்கு போர் அடிச்சா என்ன செய்யும் ? CD போட்டு பாக்கும் … EF க்கு உடம்பு சரியில்லைனா எங்க போகும் ? GH க்கு போகும் .. IJKL க்கு எனிமி யாரு ? MN ( எமன் ) தான் … OP ரேசனுக்குப்போனா ? Qல தான் நிக்கும் … RS க்கு தலை வலிச்சா ? T குடிக்கும் … UVWXY க்கு பறக்கனும்னா ? Z ( ஜெட் ) ல போகும் . அவ்வளவு தாங்க இந்த ABCD … புரிஞ்சுதா ?
ஒருத்தன் காலைல எழுந்து ஷீ போட்டுட்டு எம்டி கிரவுண்டுல செம ஸ்பீடா ஓடுனானாம் . திடீர்னு பார்த்தா அவன் கால்ல ரத்தமாம் . ஏன் ? ஏன்னா அவன் போட்டிருந்தது கட்ஷீவாம் !! அதான் காலை கட் பன்னிடுச்சாம்
ஒரு யானை திங்ககிழமையானா கோயிலுக்கு போகுமாம் புதன்கிழமையானா சர்சிக்கு போகுமாம் வெள்ளிக்கிழமையானா மசூதிக்கு போகுமாம் ஏன் ?ஏன்னா அதுக்கு மதம் பிடிக்குமாம் .
சரியான மழை நைட்டு ஒரு மணி இருக்கும் , ஒருத்தன் என்ன பன்னான் ஒரு அப்பார்ட்மெண்டுக்கு போய் முதல் மாடில இருக்கிற வீட்டு கதவ டம்மு டம்முனு தட்டினான் ஏன் ? ஏன்னா அவங்க வீட்ல காலிங்பெல் இல்ல .
ஒரு டாக்டருக்கு 35 வயசாம் , அவருகிட்ட காரு பங்களா சொத்து எல்லாமே இருக்குதாம் . ஆனா ஆஸ்பத்திரிக்கு போகும்போது மட்டும் நடந்தே போவாராம் ஏன் ? ஏன்னா அவர் கால்நடை டாக்டராம் …
ஒரு கிணத்துல நாலு தவளை இருந்துச்சாம் ஒருத்தன் பெரிய கல்ல தூக்கி போட்டானாம் . மூனு தவளை செத்துடுச்சாம் ஒரு தவளை மட்டும் சாகவே இல்லையாம் ஏன் ? ஏன்னா அது பித்தளை தவளை
பொதுவா சோப்பு டப்பா பாத்தீங்கன்னா கட்டமா இருக்கும் ரவுண்டா இருக்கும் ஓவல் ஸ்டைல்ல இருக்கும் . ஆனா எல்லா சோப்பு டப்பாலையும் ஓட்ட மட்டும் சின்ன சின்னதா இருக்கும் ஏன் ? ஏன்னா பெரிய ஓட்டையா இருந்த சோப்பு கீழ விழுந்துரும்ல
மட்டன் பிரியாணில சிக்கன் இருக்காது . ஆனா சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும் ஏன் ? சாப்பிட்றதுக்குதான்
ஒருத்தன் புதுசா ஒரு பில்டிங் கட்டுனான் . அந்த பில்டிங்குல ஒன்பது மாடிக்கு பெயிண்ட் அடிச்சுட்டானாம் . ஆனா பத்தாவது மாடிக்கு பெயிண்ட் அடிக்கவே இல்லையாம் ஏன் ? ஏன்னா அது மொட்ட மாடியாம்
தலைவருக்கு வேற வேலை இல்ல … ” ” ஏன் ? ” ” ரயில் கட்டண உயர்வுக்கு டி.டி.ஆர் . உருவ பொம்மையை எரிக்கப்போறாரே !
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிக்கனியைப் பறித்து , கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தலைவரது பழக் கடையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
நாங்க போடுற ‘ பிளாட் ‘ பக்கத்துலயே போலீஸ் ஸ்டேஷன் இருக்குது . அப்படியா ? ” ” ஆமாம் ! நீங்க இந்த ‘ பிளாட்’டை வாங்கின பிறகு , வில்லங்கம் வந்துச்சுதுன்னா பக்கத்துலயே கம்ப்ளெயின்ட் பண்ணிக்கலாம்
இவ்வளவு நடந்த பிறகும் எனக்கு சச்சின ரொம்ப புடிக்கும் . ஏன் ப்ரோ விஜய் நடிச்ச படமாச்சே
உலகத்துல ஒரே ஒரு பேங்க்ல மட்டும் பணம் போட முடியாது ஏன்னு தெரியுமா ? ஏனா அது பவர்பேங்க்
கொடுமைய பாத்தீங்களா .. … இங்க தான் சார் எங்கயாச்சும் இருக்கும் … பொறுமையா தேடி பாருங்க … கிடைக்கும்
டீச்சர் : உன் பேர் என்ன மாணவி : பொன்னி மிஸ் … டீச்சர் : ஸ்வீட் நேம் … மாணவி : ஸ்வீட் நேம் இல்ல மிஸ் … ரைஸ் நேம் …
சாப்பிட முடியாத கனி பால்கனி சுவரில் அடிக்க முடியாத ஆனி – பிரியாணி ஆபத்தான சிட்டி – எலக்ட்ரிக்சிட்டி
அதிர்ஷ்டம் இல்லாத நகரம் – லக்னோ தொங்க விட முடியாத திரை – குதிரை வெட்டும் காய் – கத்திரிக்காய்
எப்போதும் சிரிக்கும் பூச்சி – ஈ உட்கார முடியாத கடை – சாக்கடை கையும் கூடிய காய் – முருங்கைக்காய்
அழைக்கும் காய் -வாழைக்காய் அசைவக் காய் – முட்டைக்கோஸ் குத்தும் காய் – முள்ளங்கி
வாழைப்பழம் திருடுறதை உங்க அப்பா பார்த்துட்டாரே . அப்புறம் என்ன செஞ்சாரு ? வீட்டுக்கு வந்து ” தோலை ” உரிச்சிட்டாரு .
நண்பர் 1 : உங்கள் குழந்தை உங்களைப் போலவே இருக்கிறது நண்பர் 2 : உஷ் உஷ் .. சத்தமா சொல்லாதீர்கள் அது பக்கத்து வீட்டுப் பெண்ணின் குழந்தை
வேடந்தாங்கல் பறவைகள் எங்கிருந்து வருகின்றன முட்டைல இருந்துதான்
ஏங்க சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன் எனக்கு எவ்ளோ சம்பளம் கொடுப்பீங்க ?உனக்கு எதுக்குடா சம்பளம் நீ சமைக்க ஆரமிச்சிட்டாலே என் இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே
உன்னை கடிச்ச கொசுவை ஏன்டா அடிக்காம விட்டுட்டே மற்றொருவன் : அதுக்குள்ள என் ரத்தம் ஓடுதுடா அதான் விட்டுட்டேன் .
டாக்டர் , நீங்க தான் என் தெய்வம் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது , ஆப்பரேஷன் முடிஞ்சா நீங்களும் தெய்வம்தான் .
வெண்ண வியாபாரி லெட்டர் எப்படி எழுதுவாரு ” உருகி , உருகி எழுதுவாரு !
டாக்டர் : நம்ம ஹாஸ்பிடல் விளம்பரத்திற்கு நல்ல பஞ்ச் டைலாக் சொல்லு நர்ஸ் : கூட்டிட்டு வாங்க தூக்கிட்டு போங்க பணம் எங்களுக்கு .. பொணம் உங்களுக்கு …
கிடைக்கிற வரைக்கும் வேலை கிடைக்கலையே என்று கஷ்டமா இருந்துச்சு வேலை கிடைச்ச பிறகு வேலைக்கு போறதுக்கே கஷ்டமா இருக்கு
நானும் அரைமணி நேரமாக காந்தத்தை வைத்து try பண்ணுறேன் … முடியலை பேரீச்சம்பழத்தில இரும்புச்சத்து இருக்குன்னு இன்னைக்கு செத்தான்டா .. சொன்னவன்
டாக்டர் : தண்ணியை காய்ச்சி வடிகட்டி குடிக்க சொன்னேனே செஞ்சியா ? வடிவேலு : அப்படி செஞ்சதுக்கு தான் போலீஸ்ல புடிச்சிட்டு போயிட்டாங்க
ஒரு எறும்பை கட் பண்ணா என்ன ஆகும் விடை : கட்டெறும்பு ஆகும்
டாக்டரிடம் , நான் டெய்லர் வேலை பார்க்கிறதா சொல்லி இருக்கக் கூடாது ! ஏன் ? என்னாச்சு ? என்னோட பையனுக்கு ஆப்பரேஷன் முடிஞ்சதும் , நீங்களே ” தையல் ” போட்டுக்கோங்கனு சொல்லிட்டாரு
அதிக Weight தூக்குற பூச்சி எது ? மூட்டைப் பூச்சி … பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது ? தொப்பை . வேலைக்கு போற விலங்கு எது ? பனி கரடி
கதவும் , ஜன்னலும் இல்லாத ரூம் எது ? ‘ Mush’room … தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும் ? செலவாகும் …
கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா , சத்தம் போட்ட கொலுசு வருமா ?
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும் , வெயில் அடிச்சா , திருப்பி அடிக்க முடியாது
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் , ஆனா ஓடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்கமுடியாது.
April Fool Tamil Jokes Conclusion
ஏப்ரல் முட்டாள்கள் தினத்தின் தோற்றம் நிச்சயமற்றது, ஆனால் இது இடைக்காலத்தில் ஐரோப்பாவில் ஒரு பாரம்பரியமாகத் தொடங்கியதாக நம்பப்படுகிறது. சில வரலாற்றாசிரியர்கள் இது வசந்த உத்தராயணத்துடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர், வானிலை கணிக்க முடியாதது மற்றும் மக்களின் மனநிலையை எளிதில் பாதிக்கலாம்.
click here to get whatsapp status for april fool tamil jokes
The origins of April Fool’s Day are uncertain, but it is believed to have begun as a tradition in Europe in the Middle Ages. Some historians suggest that it may have been linked to the spring equinox, a time when the weather is unpredictable and people’s moods can be easily influenced.